\
“என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும்” - ஜெட்லி குறித்து மோடி பேச்சு

“என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும்” - ஜெட்லி குறித்து மோடி பேச்சு

“என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும்” - ஜெட்லி குறித்து மோடி பேச்சு
Published on: 

தனது நெருங்கிய நண்பரான ஜெட்லிக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்த முடியாதது தன் மனதில் என்றும் நீங்காத வடுவாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த மாதம் உடல்நல குறைவால் காலமானார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். எனினும் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தால் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை. அவர் நாடு திரும்பியதும் அருண் ஜெட்லியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறையாற்றினார். அப்போது, “நானும் ஜெட்லியும் நீண்ட கால நண்பர்கள். அவருக்கு நான் அஞ்சலி செலுத்தும் நாள் வரும் என்பதை நினைத்து கூட பார்த்ததில்லை. அவருடைய மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதது என் மனதில் எப்போதும் நீங்காத வடுவாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com