இந்தியா
"தேர்வுகளை சிறப்பாக எழுதுவது எப்படி?" - அறிவுரை வழங்குகிறார் பிரதமர் மோடி
"தேர்வுகளை சிறப்பாக எழுதுவது எப்படி?" - அறிவுரை வழங்குகிறார் பிரதமர் மோடி
பள்ளி மாணவர்கள் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வதற்கான அறிவுரைகளை பிரதமர் மோடி வரும் ஒன்றாம் தேதி வழங்க உள்ளார்.
இத்தகவலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். டெல்லி டால்கடோரா மைதானத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாட உள்ள பிரதமர் தேர்வுகளுக்கான அறிவுரைகளை வழங்குவார் என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். எவ்வாறு தேர்வுகளுக்கு தயாராவது, தேர்வு பயத்தை எப்படி போக்குவது என்பது போன்ற ஆலோசனைகளை பிரதமர் மோடி தொடர்ந்து 5ஆவது ஆண்டாக வழங்க உள்ளார். 2018,2019, 2020ஆம் ஆண்டுகளில் டெல்லியில் இந்நிகழ்ச்சி நடந்தது. கடந்தாண்டு ஆன்லைன் முறையில் பிரதமரின் ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.