\
 பிரதமர் வெளிநாட்டு பயணம்
பிரதமர் வெளிநாட்டு பயணம்முகநூல்

மூன்றாவது முறையாக பிரதமர் - முதல் பயணமே இங்கேயா?

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக நாளை மறுநாள் இத்தாலி செல்கிறார்.
Published on: 

அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஜி-7 உறுப்பினர்களாக உள்ளன. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பை ஏற்று, அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பிரதமர் மோடியுடன் நாளை மறுநாள் இத்தாலிக்குச் செல்லவுள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் நிலையில், ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிமுகநூல்

ஜி-7 மாநாட்டை தொடர்ந்து அடுத்த மாதம் கசகஸ்தானில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளது.

 பிரதமர் வெளிநாட்டு பயணம்
24 ஆண்டுகளுக்குப் பின் புதிய தேர்வு... ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்கிறார் மோகன் சரண் மஜி
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com