வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

மூன்றாவது முறையாக போட்டியிடும் உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுதாக்கல் செய்துள்ளார் பிரதமர் மோடி.
வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடிபுதிய தலைமுறை

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான நான்கு கட்ட தேர்தல்கள் தற்போதுவரை நிறைவடைந்துள்ளது. இந்தச் சூழலில் 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட தேர்தல் வருகிற மே 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் வாரணாசி உள்ள 3 ஆவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி தனது வேட்புமனுவை வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். மனுதாக்கலின் போது உ.பி முதலமைசர் யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார். மேலும் பிரதமரின் வேட்புமனுவை பண்டிட் பைஜ்நாத் படேல், லால் சந்த், குஷ்வாகா, சஞ்சய் சோங்கர் ஆகியோர் முன்மொழிந்தனர்.

இதுவரை உத்தரப்பிரதேச மாநிலம் வாராணாசி தொகுதியில், 2 முறை பிரதமர் மோடி போட்டியிட்டுள்ளார். இதன்படி 2014 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மோடி 5,81,000 வாக்குகளை பெற்றார். அப்போது, இவரை எதிர்த்து களமிறங்கிய தற்போதை டெல்லி முதலமைச்சர் ஆம்ஆத்மியின் கெஜ்ரிவால் 2 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார்.

2019இல் இங்கு மீண்டும் போட்டியிட்ட பிரதமர், இம்முறை 6 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை கைப்பற்றினார். அப்போது அவரை, எதிர்த்து போட்டியிட்டசமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், I.N.D.I.A. கூட்டணி சார்பில் இத்தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிற இருக்கிறார். ஆகவே, கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று பாஜக வியூகம் வகுத்துள்ளது.

உத்தரப் பிரதேசம்  

கங்கை நதி ஓடும் இத்தொகுதியில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 19,65,000. இதில் 65% வாக்காளர்கள் நகர்ப்புறத்தினர். 35% பேர் மட்டுமே கிராமப்புற மக்கள். வாக்காளர்களில் 75% பேர் இந்துக்கள். இவர்களில் 11% பேர் பட்டியலினத்தவர். இது தவிர 20%இஸ்லாமியர்களும் பிற மதத்தவர்கள் 5% பேரும் உள்ளனர். இத்தொகுதி இதுவரை 17 மக்களவை தேர்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் காங்கிரஸ் 7 முறையும் பாஜக 7 முறையும் வெற்றிபெற்றுள்ளன. ஜனதா தளம், ஜனதா, சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை இங்கு வென்றுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
“காங்கிரஸ் தலைவர்கள் கூறியதைதான் பிரதமர் மோடி குறிப்பிட்டார்” - தேர்தல் ஆணையத்தில் பாஜக பதில்

உத்தப்பிரதேசத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் இங்கு ஒரு முறை கூட வென்றதில்லை என்பது சுவாரசியமான தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com