உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்காத பிரதமர் மோடி! உலக நாடுகளுக்கு சொல்லும் செய்தி என்ன?

ஜி7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதைத் தொடர்ந்து ஸ்விட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி சொல்லும் செய்திதான் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
நரேந்திர மோடி
நரேந்திர மோடிபுதிய தலைமுறை

ஜி7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதைத் தொடர்ந்து ஸ்விட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி சொல்லும் செய்திதான் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக, ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ளார். இதுவரை 5 முறை , ஜி 7 உச்சி மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருக்கிறார். ஆனால் 10 ஆண்டுகளில் முதல் முறையாக, கூட்டணி அரசை தலைமை தாங்கும் பிரதமராக உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.

தனது முக்கியத்துவத்தை உலக தலைவர்களுக்கு மீண்டும் உணர்த்துவதற்கு பிரதமர் மோடிக்கு ஜி7 உச்சி மாநாடு ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் உலக தலைவர்கள் மத்தியில் தமது செல்வாக்கு முன்பு இருந்ததைப் போலவே வலுவானதாக இருக்கிறது என்ற கருத்தை கொண்டு சேர்க்கமுடியும். இந்த மாநாட்டின் போது அவர் பல உலகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த உச்சி மாநாடுக்கு பிறகு உக்ரைனில் அமைதியை உருவாக்க, ஸ்விட்சர்லாந்தில் உக்ரைன் அமைதி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவேண்டும் என பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மோடியிடம் வலியுறுத்தி வந்தாலும் அவர் அங்கு செல்லாமல் ஒரு அதிகாரியையே இந்திய பிரதிநிதியாக அனுப்பி வைக்கிறார்.

தேர்தலில் தமக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம், ஆனால் நாட்டின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு இதன் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. உக்ரைனில் பேச்சுவார்த்தை மூலம் அமைதி திரும்பவேண்டும் என விரும்பும் அதே நேரத்தில், ரஷ்ய அதிபர் புதினை தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சியில் தாம் சேரவில்லை என்கிற செய்தியை சொல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பல உலகநாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என கூறியிருப்பது ஒருவகையில் மோடியின் முடிவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. 160 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை சுமார் 70 நாடுகள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. அமெரிக்க அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்காத நிலையில், ஜி 7 உச்சி மாநாட்டையே ரஷ்யாவை தனிமைப்படுத்துவதற்கான தளமாக பயன்படுத்திக்கொள்ள மேற்கத்திய தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நரேந்திர மோடி
HeadLines|இந்தியா கொண்டுவரப்படும் குவைத் விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் To இத்தாலி சென்றார் பிரதமர்!

இதை பிரதமர் மோடி எப்படி எதிர்கொள்வார் என்று அரசியல் திறனாய்வாளர்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com