pm modi
pm modipt web

“கூட்டணிக் கட்சிகளின் படகுகளைக் கவிழ்த்த காங்கிரஸ்” - பிரதமர் மோடி

காங்கிரஸ் தனது சொந்த படகை மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் படகுகளையும் மூழ்கடித்திருப்பதாக, மஹாராஷ்டிரா தேர்தல் முடிவை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
Published on

மஹாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மஹாராஷ்டிராவில் நல்லாட்சி, சமூகநீதி ஆகியவை வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். மஹாராஷ்டிரா மக்களின் தீர்ப்பின் மூலம் எதிர்மறை அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸின் பொய்கள், வஞ்சகத்தை தேர்தல் முடிவுகள் நிராகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

pm modi
கர்நாடகா: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி - 25 ஆண்டுக்கு பின் ஷிகாவி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

காங்கிரஸ் தற்போது ஒட்டுண்ணிக் கட்சியாக மாறிவிட்டதாக சாடிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தனது சொந்த படகை மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் படகுகளையும் மூழ்கடித்திருப்பதாகவும் விமர்சித்தார். பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதை குறிப்பிட்டு பேசிய அவர், நாடு தற்போது வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறது என்பதை இது காட்டுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com