“வஞ்சகத்தை தவிர காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதையும் கொடுக்கவில்லை” பிரதமர் மோடி

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு ஊழல் செய்து, மக்களின் நம்பிக்கையை உடைத்து விட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

துர்க்கில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சில நாட்களுக்கு முன் ராய்ப்பூரில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். அந்த பதுக்கல்லில் ஈடுபட்ட சூதாட்டக்காரர்களுக்கும், பந்தயம் கட்டுபவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை சத்தீஸ்கர் மக்களுக்கு, காங்கிரஸ் அரசும் முதலமைச்சரும் சொல்ல வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

சத்தீஸ்கரில் ஏழைகளை சூறையாடியவர்கள் மீது பாஜக ஆட்சி பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஊழல் செய்து, ஒன்றன்பின் ஒன்றாக மோசடியில் சிக்கி சத்தீஸ்கர் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் மோடி விமர்சித்துள்ளார். வஞ்சகத்தை தவிர ஏழைகளுக்கு காங்கிரஸ் வேறு எதையும் கொடுத்தது இல்லை என்றும் அவர் கூறினார். நாட்டிலேயே பெரிய சாதி, ஏழைகள்தான் எனக் கூறிய பிரதமர், இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com