பிரதமரின் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதா? வேண்டாமா?- எதிர்க்கட்சிகள் ஆலோசனை

பிரதமரின் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதா? வேண்டாமா?- எதிர்க்கட்சிகள் ஆலோசனை
பிரதமரின் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதா? வேண்டாமா?- எதிர்க்கட்சிகள் ஆலோசனை

கொரோனா பாதிப்பு குறித்த பிரதமரின் விளக்கக்கூட்டத்தில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியதை அடுத்து, அதுதொடர்பாக வீடியோ விளக்கக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கொரோனா பாதிப்பு தொடர்பான வீடியோ காட்சி எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு காண்பிக்கப்படுகிறது.

இதில் கலந்து கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் கூடி ஆலோசிக்கின்றனர். இதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், மத்திய அரசின் விளக்கக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com