பிரதமர் மோடியின் தொடர் சர்ச்சை பேச்சுகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரதமர் மோடி  சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடி சர்ச்சை பேச்சுபேஸ்புக்

முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமரின் பரப்புரைக் கூட்டங்களில், எதிர்க்கட்சிகளின் மீதான தாக்குதல் படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருப்பதை காணமுடிகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, அந்த சொத்து பங்கீடு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பேசிய விஷயங்கள் போன்றவற்றை, பிரதமர் மோடி திரித்து பேசுகிறார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

மேலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்.பி.ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பல அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதமர் மோடியின் பேச்சுக்கு தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், மீண்டும் ஒரு புதிய சர்ச்சை பேச்சை பேசியுள்ளார் பிரதமர் மோடி.

ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்துக்களின் சொத்துகளை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுக்கும் என உண்மையைத்தான் பேசினேன். உண்மையைச் சென்னதால் கட்சிகள் அச்சம் அடைந்துள்ளனர். காங்கிரஸை அம்பலப்படுத்திவிட்டதால் என்னை அவமதிக்கிறார்கள். தைரியம் இருந்தால் உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி  சர்ச்சை பேச்சு
சர்ச்சையான பிரதமரின் பேச்சு; வலுக்கும் கண்டனம்!

மேலும் பேசிய அவர், உங்களிடம் உங்களின் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறதா? இல்லையா? என்பதை காங்கிரஸ் கட்சி எக்ஸ் ரே செய்து சோதனை செய்யும். நீங்கள் வீட்டில் சிறிய டப்பாவில் பணம் போட்டு வைத்திருந்தாலோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கு சொத்து ஏதேனும் சேர்த்து வைத்திருந்தாலோ உங்களின் தேவைக்கு அதிகமாக சேமித்து வைத்திருக்கும் பணத்தை காங்கிரஸ் அரசு எடுத்துக்கொள்ளும், பிறருக்கு கொடுத்தும் விடும்.

2014-ஆம் டெல்லியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நாடே எதிர்பாராத முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனால், இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், எதிரிகள் எல்லை தாண்டி நமது ராணுவ வீரர்களின் தலையை இன்னும் வெட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்போது, காங்கிரஸ் அரசு எதுவும் செய்திருக்காது. நமது ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டிருக்காது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், நாட்டில் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கும்.

பிரதமர் மோடி  சர்ச்சை பேச்சு
ராஜஸ்தானில் மோடி சர்ச்சை பேச்சு| உண்மையில் மன்மோகன் சிங் பேசியது என்ன? #viralvideo!

காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ..ஊழலுக்கு புதிய வழிகளை கண்டுபிடித்திருக்கும்...காங்கிரஸ் ஆட்சியின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது. இதுதான் ராஜஸ்தானின் அடையாளம் என்று காங்கிரஸ் வெட்கமின்றி கூறியது. ” என்று தெரிவித்துள்ளது தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடி -  முன்னதாக பேசிய சர்ச்சை பேச்சுக்கள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டபோது, அது முஸ்லீம் லீக்கின் தேர்தல் வாக்குறுதிகள்போல இருப்பதாக பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

இறைச்சி உண்பதாக விமர்சனம்

மேலும், புனிதமான சாவன் மாதத்தில் காங்கிரஸ் மூத்தத்தலைவர் ராகுல்காந்தி இறைச்சி உண்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். தொடர்ந்து தனது பரப்புரைகளில் இதனை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, வலுவான வார்த்தைகளால், பேசியிருந்தார்.

மன்மோகன்சிங் பேச்சில்.....

குறிப்பாக, “பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் சமமான பங்கீட்டை பெற நாட்டின் வளங்கள் மீது முதல் உரிமை பெற வேண்டும். இவர்கள் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்.” என்று 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் பேசியதில், மற்ற பிரிவினரை குறிப்பிடும் பகுதியை விட்டுவிட்டு இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிடுவதுபோல பிரதமர் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அதிலும் 18 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போதைய நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை களத்தில் பிரதமர் பேசியிருக்கிறார் என்பதால் காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com