ஜார்க்கண்டின் நிலம், வனம், நீரை பாஜக பாதுகாக்கும்: பிரதமர் மோடி

ஜார்க்கண்டின் நிலம், வனம், நீரை பாஜக பாதுகாக்கும்: பிரதமர் மோடி
ஜார்க்கண்டின் நிலம், வனம், நீரை பாஜக பாதுகாக்கும்: பிரதமர் மோடி

ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல்முறையாக ஐந்து ஆண்டுகளை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை கூட்டத்தில் பேசினார்.

வரும் 30-ஆம் தேதி முதல் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பரப்புரையை அம்மாநிலத்தில் உள்ள டால்டன்கன்ஜில் மோடி மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சி நல்லாட்சி செய்தது என்றும், நக்சல் வசம் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்டின் நிலம், வனம் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்க பாரதிய ஜனதா அரசு இருப்பதாக தனது பரப்புரையில் மோடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com