பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 90-ஆவது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வை குறைபாடு உள்ள 90 குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல்நல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துவதாக கூறியுள்ளார். மேலும் அத்வானி அரசியலில் பலமிக்கவர் எனக் குறிப்பிட்டுள்ள மோடி, தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் மற்ற தலைவர்களில் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்டிக் கொண்டவர் என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.