நவாஸ் ஷெரீஃப் முன்னிலையில் பாகிஸ்தானைத் தாக்கிப் பேசிய பிரதமர் மோடி

நவாஸ் ஷெரீஃப் முன்னிலையில் பாகிஸ்தானைத் தாக்கிப் பேசிய பிரதமர் மோடி

நவாஸ் ஷெரீஃப் முன்னிலையில் பாகிஸ்தானைத் தாக்கிப் பேசிய பிரதமர் மோடி

பயங்கரவாதமே மனிதகுலத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் கைகோர்க்கும் பொருட்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். பயங்கரவாதமே மனிதகுலத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்தை எதிர்த்து போராட ஷாங்காய் ஒத்துழைப்பைச் சேர்ந்த நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா உறுப்பு நாடானதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோர் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். இருந்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரிக்க மற்ற உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து, பயிற்சியும் அளிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், நவாஸ் ஷெரீஃப் முன்னிலையிலேயே பாகிஸ்தானை மறைமுகமாக பிரதமர் மோடி தாக்கிப் பேசியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com