“வெளிநாட்டுப் பயணத்தைக் குறைக்கலாம்” - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்  

 “வெளிநாட்டுப் பயணத்தைக் குறைக்கலாம்” - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்  
 “வெளிநாட்டுப் பயணத்தைக் குறைக்கலாம்” - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்  
பிரதமர் மோடிக்கு மத்திய அரசு  எப்படி எல்லாம் செலவைக்  குறைக்கலாம் என்று காங். தலைவர் சோனியா காந்தி ஐந்து பக்க அளவில் கடிதம் எழுதியுள்ளார். 
கொரோனா எதிரொலியாகப் பிரதமர் உள்பட எம்பிக்களின் சம்பளத்தில் 30 சதவிகிதம் குறைக்க மத்திய அமைச்சரவை  முடிவு செய்தது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று இந்தத் தகவலைத் தெரிவித்தார்.  இதன்படி குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஆளுநர்கள் ஆகியோரின் சம்பளத்திலும் 30 சதவிகிதம் பிடிக்கப்படும்.  ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்பிக்களின் சம்பளத்திலும் 30 சதவிகிதம் பிடிக்கப்படும் என்றும் சம்பளக் குறைப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்கு  எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தளவில் திருமாவளவன், சு. வெங்கடேசன் போன்றோர் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த முடிவை வரவேற்று பிரதமர் மோடிக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு 30 சதவீத சம்பளக் குறைப்பு குறித்து அமைச்சரவை செய்த முடிவுக்கு  ஆதரவைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து  சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில்,  ‘ஐந்து விதமான பரிந்துரைகளை’ அவர் முன்வைத்துள்ளார்.  அந்தப் பரிந்துரையில் அவர், “ரூ .20,000 கோடி செலவில் நடைபெற உள்ள "சென்ட்ரல் விஸ்டா" திட்டத்தை நிறுத்தி வைக்கலாம். அதேபோல் அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்வதை நிறுத்தி வைக்கலாம். மேலும் அரசு வெளியிடும் விளம்பரங்களை நிறுத்தி வைக்கலாம்” எனக் கூறியுள்ளார். 
மேலும் அவர், “தற்போதுள்ள வரலாற்றுக் கட்டிடங்கள் உள்ளாகவே நாடாளுமன்ம் மிக வசதியாக செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று சோனியா காந்தி எழுதினார்.
பாஜக அரசு இப்போது இயக்கி வரும் நாடாளுமன்ற கட்டிடத்திற்குப் பதிலாக புதிய கட்டிடத்தைக் கட்ட முடிவு எடுத்திருந்தது. அதனைதான் சோனியா மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com