\
ஜப்பானில் பிரதமர் மோடி: ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்

ஜப்பானில் பிரதமர் மோடி: ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்

ஜப்பானில் பிரதமர் மோடி: ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்
Published on

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்.

கடந்த ஜூலை 8ஆம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ஜப்பானை அதிககாலம் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள அபேவிற்கு பிரம்மாண்டமான முறையில் இறுதிச்சடங்குகள் நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 50 நாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளார். தனிப்பட்ட முறையிலும் தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் மிகுந்த பணிச்சுமைக்கு இடையிலும் அபேவின் இறுதிச்ச டங்கில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

இதற்காக நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com