“மேற்குவங்க மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” - பிரதமர் மோடி

“மேற்குவங்க மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” - பிரதமர் மோடி

“மேற்குவங்க மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” - பிரதமர் மோடி
Published on

பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி பேச்சை பாதியில் நிறுத்தியதோடு, மன்னிப்பும் கேட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் தாக்கூர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரின் பேச்சைக் கேட்ட ஏராளமான மக்கள் கூடினர். மைதானத்தின் இருப்பை காட்டிலும் இரண்டு மடங்கள் மக்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மக்கள் தடுப்புகளை தாண்டி மைதானத்திற்கு வர முயன்றனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. 

பொதுக் கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருந்த மோடி, இடையிடையே மக்களை அமைதி காக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தினார். “இந்தப் பொதுக் கூட்டத்திற்கு மைதானம் மிகவும் சிறியது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே தொடர்ந்து இருங்கள். மைதானத்தில் இடமில்லை என்பதை உங்களிடம் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். இதுபோல் செய்யாதீர்கள்” என்று கூறினார் மோடி. பின்னர், நிலை கட்டுக்குள் வராததால் கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டார். 

இதனையடுத்து, துர்காபூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, “தாக்கூர் நகர் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. கூட்டத்தில் உற்சாகம் அலைமோதியது. ஏராளமான தாய்மார்களையும், சகோதரிகளையும் பார்த்தேன். மைதானத்தின் பரப்பை காட்டிலும் இரண்டு மடங்கு கூட்டம் வந்தது. கூட்டத்தில் இருந்த மக்களுக்கு சிக்கலாக அமைந்துவிட்டது. 

தாக்கூர் நகர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். என் மீது வைத்துள்ள அன்பினை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அதேபோல், கூட்டத்திற்கு வந்த சகோதரிகளும், அவர்களது குழந்தைகளும் சில சிரமங்களை சந்தித்தனர். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுடைய உற்சாகம் எனக்கு தெரியும். உங்களுடைய அன்புதான் என்னுடைய வலிமை. ஆனால், அதோடு, நீங்கள் அமைதி காக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com