காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு

காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு

காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு
Published on

ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்தீரிகர்களை ஏற்றிக்கொண்டு ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ராம்பன் மாவட்டதின் நச்லானா பகுதியில் நிலைதடுமாறி பள்ளத்திற்குள் தலைகீழாக விழுந்தது. இந்த விபத்தில் 16 பக்தர்கள் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து தமது டிவிட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய பிரார்த்திப்பதாகவும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com