பிரணாப் முகர்ஜி மறைவு : பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்

பிரணாப் முகர்ஜி மறைவு : பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்
பிரணாப் முகர்ஜி மறைவு : பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்

நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “பாரத ரத்னா விருது பெற்ற பிரணாப் முகர்ஜியை இழந்து இந்தியா வருத்தப்படுகிறது. நமது தேசத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய அடையாளத்தை அவர் விட்டுச்சென்றுள்ளார். ஒரு மேதைக்கு நிகராவும், சிறந்த அரசியல்வாதியாகவும், அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்ட அரசியல் பண்பு கொண்டிருந்தார்.

குடியரசுத் தலைவர் பிரணா முகர்ஜி, “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைந்தார் என்பது வருத்தமளிக்கிறது. அவரது மறைவு ஒரு சகாப்தத்தை கடந்தது. பொதுவாழ்வில் மகத்தான அவர், ஆத்மப்பூர்வமாக அன்னை இந்தியாவிற்காக உழைத்தார். தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்திற்கு, நண்பர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி (84). இவர் உடல்நிலை குறைபாடு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனாவா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அவருக்கு, நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. கோமாவில் இருந்த அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com