கொரோனா தடுப்பூசி: ஆராய்ச்சி மையங்களை நேரில் பார்வையிடவுள்ள பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடக்கும் மையங்களை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிட உள்ளார்.
ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்து வரும் நிலையில் அங்கு பிரதமர் நேரில் சென்று ஆய்வு விவரங்கள் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கேட்டறிகிறார். இதைத் தொடர்ந்து புனே செல்லும் பிரதமர் அங்கு, சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிகிறார்.
இதன் பின் அங்கிருந்து ஐதராபாத் செல்லும் பிரதமர், அங்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி மீதான விவரங்களை கேட்டறிகிறார். கொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு மாதங்களுக்குள் தயாராகி விடும் என கூறப்படும் நிலையில் அவற்றை நாடெங்கும் கொண்டு சென்று சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.