பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கு சிகிச்சை?
பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்தியாவிலுள்ள 50 கோடி இலவச மருத்துவ வசதி வழங்கும் விதமாக பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 16,000 மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரையில் இந்தக் காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை பெற முடியும்.
இந்நிலையில் பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் கிட்டத்தட்ட 2.25 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அதிகப்படியான பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் பணம் இல்லாமல் கஷ்டப்படும் ஏழை மக்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை ஏதும் பெறாமல் அப்படியே உயிரிழந்து விடுவதாகவும் அரசு கருதுகிறது. இதனைக் கருத்தில் வைத்துதான் பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கும் சிகிச்சைளிக்க அரசு முன்வந்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அப்படி நடைமுறைக்கு வந்தால் கீமோதெரபி, புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றையும் நோயாளிகள் காப்பீடு திட்டத்தின் கீழ் பெறலாம்.