தேசிய ஊடகவியலாளர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய ஊடகவியலாளர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய ஊடகவியலாளர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
Published on

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் செய்திகளை சேகரிக்க கடுமையாக உழைப்பதாகக் கூறியுள்ளார்.

குரலற்றவர்களின் குரலாக இருக்கும் ஊடகத்தின் பணி பாராட்டத்தக்கது என்று கூறியுள்ள பிரதமர், கடந்த மூன்று ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஊடகங்கள் மூலம் பலம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். 
தற்போது, சமூக ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், மொபைல் போன்கள் மூலம் செய்திகளை பொதுமக்கள் தெரிந்து கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

இந்த முன்னேற்றம், ஊடகத்திற்கான பங்களிப்பையும் ஜனநாயக பங்கெடுப்பையும் அதிகப்படுத்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார். துடிப்பான ஜனநாயகம் அமைய ஊடக சுதந்திரம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பிரதமர், இந்திய ஊடகங்கள் 125 கோடி மக்களின் திறமை, பலம், திறனை வெளிக்காட்டுவதாக அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com