மத்திய பட்ஜெட்: ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் புதிதாக 200 டிவி சேனல்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் புதிதாக 200 டிவி சேனல்கள்!
மத்திய பட்ஜெட்:  ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் புதிதாக 200 டிவி சேனல்கள்!

நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியாவில் 1 - 12ம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அவர், “1-12 வகுப்புக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்துவதற்காக 200 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும். ஒரு வகுப்பு - ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் புதிதாக 200 கல்வி தொலைக்காட்சிகள் உருவாக்கப்படும். பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்விமுறை அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

சிறு குழந்தைகள் நலனுக்காக, நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். இவற்றுடன் சேர்த்து சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.60 ஆயிரம் கோடியில் 18 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

போலவே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மனரீதியாக சிகிச்சையளிக்க மையங்கள் உருவாக்கப்படும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com