\
‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் 68-வது எபிசோட்; ஐடியா கேட்கும் பிரதமர்!

‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் 68-வது எபிசோட்; ஐடியா கேட்கும் பிரதமர்!

‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் 68-வது எபிசோட்; ஐடியா கேட்கும் பிரதமர்!
Published on

‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் 68-வது எபிசோடுக்காக பொதுமக்களிடம் ஐடியா கேட்டுள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘மான் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக  நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் மோடி நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் 68-வது எபிசோட் ஆகஸ்ட் 30 அன்று வெளியாக உள்ளதை தொடர்ந்து, தான் என்ன தலைப்பில் பேச வேண்டும் என்பது பற்றி தெரிவிக்க பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

1800-11-7800 என்ற தொடர்பு எண் மூலமாகவோ,  நமோ ஆப் அல்லது MyGov இணையதளம் வழியாகவோ மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com