கொரோனாவால் உயிரிழந்த இந்திய - அமெரிக்க வாழ் பத்திரிகையாளர்: பிரதமர் மோடி இரங்கல்

கொரோனாவால் உயிரிழந்த இந்திய - அமெரிக்க வாழ் பத்திரிகையாளர்: பிரதமர் மோடி இரங்கல்

கொரோனாவால் உயிரிழந்த இந்திய - அமெரிக்க வாழ் பத்திரிகையாளர்: பிரதமர் மோடி இரங்கல்
Published on

கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்திய - அமெரிக்க வாழ் பத்திரிகையாளரான பிரம் காஞ்சிபோட்லாவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய இந்த கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 1,430,528 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,023 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் பல நாடுகள் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அமெரிக்காவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதுவரையில் அமெரிக்காவில் 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தாக்குதலால் உயிரிழந்த இந்திய - அமெரிக்க வாழ் பத்திரிகையாளரான பிரம் காஞ்சிபோட்லாவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

1992ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் பிரம் காஞ்சிபோட்லா. 66வயதான பிரம் காஞ்சிபோட்லா கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் மார்ச் 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிகிச்சைப் பெற்றுவந்த அவர், கடந்த திங்கள்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்திய-அமெரிக்க பத்திரிகையாளர் பிரம் காஞ்சிபோட்லாவின் மறைவு வேதனை அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையிலான பரஸ்பர உறவுக்கு அவர் எடுத்த முயற்சிகளாலும், சிறந்த உழைப்பாலும் அவர் நினைவுகூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com