தமிழக அழுத்தத்திற்கு பணிய வேண்டாம்: சித்தராமய்யா

தமிழக அழுத்தத்திற்கு பணிய வேண்டாம்: சித்தராமய்யா

தமிழக அழுத்தத்திற்கு பணிய வேண்டாம்: சித்தராமய்யா
Published on

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிய வேண்டாம் என, பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழகத்திலிருந்து தரப்படும் அழுத்தங்களுக்கு பணிய வேண்டாம் என, கர்நாடக முன்னாள் முதல்வர் தேவே கவுடா நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, நதிநீர்ப் பங்கீட்டிற்கு என ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் தமிழகத்திலிருந்து வரும் அழுத்தங்களுக்கு மத்திய அரசு பணிய வேண்டாம்  எனவும் அவர் வலியுறுத்தினார். 

இதற்கிடையே கர்நாடக முதல்வரின் கருத்து குறித்து சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்தின்படியும் அரசியலமைப்பு படியுமே தமிழக அரசு செயல்படுவதாக பதில் அளித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com