பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட சோறை, சிறுவர்கள் பந்துபோல் மாற்றி விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் உயிர்வாழ அடிப்படை ஆதாரமான அரிசியிலேயே கலப்படம் உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் உள்ள ஒரு சந்தையில், பால் (Pal) என்பவரின் குடும்பத்தினர் அரிசி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த அரிசியின் சுவை வித்தியாசமாக இருந்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி கூட்டுறவு அதிகாரிகள் அந்த சந்தையில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சமைக்கப்பட்ட அந்த பிளாஸ்டிக் அரிசியை சிறுவர்கள் பந்துபோல் மாற்றி விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.