மலேசியா: திடீரென கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா விமானம்.. அடுத்த நொடியே நடந்த பயங்கரம் - 10 பேர் பலி!

மலேசியாவில் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் மோதி வெடித்து எரிந்ததில் 8 பேரும், விமானம் மோதியதில் சாலையில் சென்ற 2 பேரும் உயிரிழந்தனர்.

மலேசியாவின் சுற்றுலா தீவான லாங்கவியில் இருந்து தனியார் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறிய ரக விமானத்தில் 8 பேர் இருந்ததாக தெரிகிறது. கோலாலம்பூர் நோக்கிப் பறந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து செலங்கார் என்ற பகுதியின் நெடுஞ்சாலையில் மோதி தீப்பிடித்தது. விமானத்தில் இருந்து கரும்புகை எழுந்தது.

மலேசியா
மலேசியாபுதிய தலைமுறை

இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. மேலும், சாலையில் விமானம் மோதியபோது கார் மற்றும் பைக்கில் சென்றவர்கள் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com