ஓபிசி இட ஒதுக்கீட்டை 4 வகைகளாகப் பிரித்து உள் ஒதுக்கீடு வழங்கத் திட்டம்?

ஓபிசி இட ஒதுக்கீட்டை 4 வகைகளாகப் பிரித்து உள் ஒதுக்கீடு வழங்கத் திட்டம்?

ஓபிசி இட ஒதுக்கீட்டை 4 வகைகளாகப் பிரித்து உள் ஒதுக்கீடு வழங்கத் திட்டம்?
Published on

ஓபிசி இட ஒதுக்கீட்டை 4 வகைகளாகப் பிரித்து 2, 6, 9, 10 சதவீதங்களில் உள் ஒதுக்கீடு வழங்க ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு எனப்படும் ஓபிசி வகுப்பில் மொத்தம் 2,633 சாதிப் பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவினருக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் மொத்தம் 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இச்சூழலில், ஓபிசி பிரிவுகளுக்கான இந்த 27% இட ஒதுக்கீட்டை 2%, 6%, 9%, 10% என 4 வகையாகப் பிரித்து, உள் ஒதுக்கீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிசி பிரிவில் உள்ள ஒருசில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பலனடைவதாக புகார் எழுந்ததால், இந்த பரிந்துரையை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீட்டில், தொகுப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்துப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையம்தான், நீதியரசர் ரோகிணி ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com