\
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு -  பியூஷ் கோயல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்
Published on

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் பியூஷ் கோயல், மாநில அரசுகள் மருத்துவ ஆக்சிஜன்களுக்கான தேவையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆக்சிஜன் தேவையை கையாள்வது எவ்வளவு முக்கியமோ அதனை முறையாக விநியோகிப்பதும் அவ்வளவு முக்கியமானது என பதிவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு, அந்த பொறுப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com