\
மாநிலங்களவை பாஜக குழு தலைவராக பியுஷ் கோயல் நியமனம்

மாநிலங்களவை பாஜக குழு தலைவராக பியுஷ் கோயல் நியமனம்

மாநிலங்களவை பாஜக குழு தலைவராக பியுஷ் கோயல் நியமனம்
Published on

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் குழுவின் தலைவராக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்பொறுப்பில் ஏற்கெனவே இருந்த தாவர்சந்த் கெலோட் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவை பாரதிய ஜனதா எடுத்துள்ளது. புதிய பொறுப்பை ஏற்க உள்ள பியுஷ் கோயலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்களவையைபோல் இல்லாமல் மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மையில்லாத நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் கடுமையான சவாலை பியுஷ் கோயல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com