ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் யுனெஸ்கோவின், உலகப் பாரம்பரியம் மிகுந்த நகரங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
ஜெய்ப்பூர் ’பிங்க் நகரம்’ என அழைக்கப்படுகிறது. தனித்துவமான கட்டிடங்கள், அங்குள்ள கலாசாரம் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கிறது. இந்த நகரை, நினைவிடங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச குழு, கடந்த ஆண்டு ஆய்வு செய்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடத்துக்கான பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தது.
அஜர்பைஜன் நாட்டில் உள்ள பாகு நகரில் நடந்துவரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 43-வது கூட்டத்தில், இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. பரிசீலனைக்கு பின் ஜெய்ப்பூரை உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்த்தது. பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், ‘’இது பெருமைக்குரியது. ராஜஸ்தான் தலைநகருக்கு கிடைத்துள்ள மற்றொரு மகுடம்’’ என்று தெரிவித்துள்ளார்.