\
சபரிமலையில் பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி !

சபரிமலையில் பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி !

சபரிமலையில் பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி !
Published on: 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் அக்டோபர் மாதம் முதலே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரி‌சனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நவம்பரில் நடை திறக்கும்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதுவும் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், துலாம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வரும் அக்டோப‌ரில் திறக்கப்படும்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பக்தர்களுக்கு சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கேரள தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com