Amphan புயல் எதிரொலி : மழைநீரில் தத்தளிக்கும் கொல்கத்தா ஏர்போர்ட்...!

Amphan புயல் எதிரொலி : மழைநீரில் தத்தளிக்கும் கொல்கத்தா ஏர்போர்ட்...!
Amphan புயல் எதிரொலி : மழைநீரில் தத்தளிக்கும் கொல்கத்தா ஏர்போர்ட்...!

Amphan புயலால் கொல்கத்தா ஏர்போர்ட் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

வங்கக்கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த Amphan புயல் நேற்று வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. பின்னர் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 2.30 மணிக்கு திஹா - சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது.

இந்தப் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் காற்று வீசியது. 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன. கட்டடங்கள் சேதமாகின. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. 10 முதல் 12 பேர் வரை இந்த புயலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அங்கு பெய்த மழையால் கொல்கத்தா ஏர்போர்ட் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஏர்போர்ட்டின் மேல்தளங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் ஏராளமான விமானங்களும் சேதமாகியுள்ளன. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com