வரலாற்று சுவடுகளை நாள்தோறும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பிஐபி !
மத்திய அரசின் செய்தி தொடர்பு நிறுவனமான பிஐபி வரலாற்று பதிவுகளை நாள்தோறும் தனது ட்விட்டர் கணக்கில் '#FromPIBArchives' என்ற ஹேஷ்டேக் உடன் பதிவு செய்துவருகிறது.
மத்திய அரசின் செய்தி தொடர்பு நிறுவனமான பிஐபி ட்விட்டர் தளத்தில் மத்திய அரசு தொடர்பான செய்திகளை பதிவிட்டு வருகிறது. அந்தவகையில் ஒரு புதிய முயற்சியாக கடந்த கால அரசு பதிவுகளை '#FromPIBArchives' என்ற ஹேஸ்டேக் மூலம் பதிவிட ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த 21ஆம் தேதி இந்த ஹேஷ்டேக்கில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஜுன் 21,1949ஆம் ஆண்டு காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு 189 மையில் தூரம் மழையில் ஏறி சென்று சிகிச்சை அளித்த ராணுவ டாக்டரின் கதை பதிவிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜூன் 4ஆம் தேதி 1949ஆம் ஆண்டு பருவமழை தொடங்கியதன் அறிவிப்பையும் ஜூன் 21ஆம் தேதி பிஐபி பதிவு செய்துள்ளது. அதேபோல, ஜூன் 22ஆம் தேதி, இந்த ஹேஸ்டேக்கில் சுதந்திர இந்தியாவில் அரசு ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டதற்கான அறிவிப்பு பதிவிடப்பட்டுள்ளது. மேலும் நேற்று இந்தப் ஹேஷ்டேக் பதிவில் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி 1947ஆம் ஆண்டு சர்தார் பட்டேல் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இந்த ஹேஸ்டேக்கில், 70ஆண்டுகளுக்கு முன்பு சினிமா சட்டம் 1918ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் குறித்த அறிவிப்பு பதிவிடப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 18,1949ஆம் ஆண்டு சினிமா சட்டம் திருத்தப்பட்டு ‘ஏ’ சான்றிதழ் மற்றும் ‘யு’ சான்றிதழ் ஆகியவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.