கொரோனா வார்டாக மாறிய ரயில் பெட்டி !

கொரோனா வார்டாக மாறிய ரயில் பெட்டி !
கொரோனா வார்டாக மாறிய ரயில் பெட்டி !

கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதையடுத்து ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்ற கடந்த சில நாள்களுக்கு முன்பு ரயில்வே துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து வடக்கு ரயில்வே நிர்வாகம் ஏசி இல்லாத ரயில் பெட்டியை கொரோனா சிகிச்சையளிக்கக் கூடிய வார்டுகளாக மாற்றி அசத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 20 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். மேலும் 800-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதிப்பை மேலும் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர். ஏப்ரல் 14-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் நாள்தோறும் இயக்கப்பட்ட 13 ஆயிரத்து 523 ரயில்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. காலியாக இருக்கும் பெட்டிகள் சில மாற்றங்களுடன் தனித்தனி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நிர்வாகம் கூட சென்னையில் அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் வடக்கு ரயில்வே நிர்வாகம் ஏசி இல்லாத பெட்டியை கொரோனா வைரஸ் வார்டாக மாற்றியுள்ளது. இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் கூறும்போது “எந்த மண்டலுத்துக்கு ரயில் பெட்டிகள் தேவையோ அங்கு செய்து அனுப்புவோம். தனிமைப்படுத்தப்படுவோருக்காக சில மாற்றங்கள் பெட்டியில் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நடுவில் இருக்கும் படுக்கை நீக்கப்பட்டுள்ளது. கீழ்படுக்கை உள்ள பிளைவுட் பலகையில் மற்றொரு பலகை இணைக்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு பெட்டிக்கு 10 தனித்தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.

மேலும் இந்த ரயில் பெட்டியில் மருத்துவ உபகரணங்கள் பொருத்துவதற்காக 220 வோல்ட் மின்சார பிளக்பாயின்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு ஜன்னல் மூடப்பட்டு, மற்றொரு ஜன்னல் திறக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டிக்கு மொத்தம் 4 கழிவறைகள், 2 குளியல் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு குளியல் அறையிலும் ஒரு ஹேண்ட் ஷவர், வாளி, கோப்பை வழங்கப்பட்டுள்ளது. குடிதண்ணீருக்காக ஒவ்வொரு பெட்டியிலும் 4 பாட்டில்கள் வைக்கும் வைக்கும் வகையில் ஹோல்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பெட்டிகளில் மருத்துவ ஆலோசனை அறை, மருத்து அறை, கேன்டீன் ஆகியவை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com