சிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

சிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

சிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி
Published on

கர்நாடகாவில் அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு பதிவு செய்ய அப்போதய முதல்வர் குமாரசாமி காவல்துறைக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இதனால் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், தனக்கு எதிராக ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன என்றும், எந்தவொரு விசாரணையையும் துணிச்சலுடன் சந்திக்க தாம் தயார் என்றும் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com