\
பெட்ரோல் தினசரி விலை நிர்ணயம் தொடரும் - தர்மேந்திர பிரதான் உறுதி

பெட்ரோல் தினசரி விலை நிர்ணயம் தொடரும் - தர்மேந்திர பிரதான் உறுதி

பெட்ரோல் தினசரி விலை நிர்ணயம் தொடரும் - தர்மேந்திர பிரதான் உறுதி
Published on

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை மதிப்புக்கு ஏற்ப தினசரி மாற்றும் நடைமுறை தொடரும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கேபினட் அமைச்சராக உயர்த்தப்பட்ட தர்மேந்திர பிரதான், இதுகுறித்து பேசுகையில், "பெட்ரோலிய பொருட்களின் விலை தினசரி மாற்றி அமைக்கப்படுவதன் மூலம் விலைகுறையும் போது நுகர்வோருக்கு உடனடியாக அதன் பயன்கள் சென்று சேரும். அதே போல் திடீரென பெரிய அளவில் விலையை உயர்த்தும் நிலையும் வராது. ஆகையால் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை மதிப்புக்கு ஏற்ப தினசரி மாற்றும் நடைமுறை தொடரும்’ என அவர் குறிப்பிட்டார். பெட்ரோல் விலை தினமும் மாற்றியமைக்கும் நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் பெட்ரோல் விலை இரண்டு மாதங்களில் லிட்டருக்கு 6 ரூபாய் 60 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com