பெட்ரோல் டீசல் விலை ரூ. 2 க்கு மேல் உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமல் 

பெட்ரோல் டீசல் விலை ரூ. 2 க்கு மேல் உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமல் 
பெட்ரோல் டீசல் விலை ரூ. 2 க்கு மேல் உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமல் 

மத்திய பட்ஜெட்டில் சிறப்பு கூடுதல் கலால் வரி தலா ஒரு ரூபாய் உயர்வான நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மோடி அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் முழு நீள பட்ஜெட் இது. 

இதில் பெட்ரோல் ‌மற்றும் டீசலுக்கு விதி‌க்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி தலா ஒரு ரூபாய் உயர்த்தப்படும் என மத்திய நிதியமைச்ச‌ர் நிர்ம‌லா சீதாராம‌ன் தெரிவித்திருந்தார். ‌‌‌இதன் மூலம் திரட்டப்படும் நிதி சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு ‌திட்டங்‌களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் ‌நிதியமைச்சர் ‌நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுருந்தார். 

சாலை உள்ளிட்ட உள்க‌ட்டமைப்பு திட்டங்களுக்கு அடுத்த‌‌ 5 ஆண்டுகளில் நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்‌படும் என‌ அறிவிக்கப்பட்டிருந்‌த‌ நிலையில் இந்த கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.50, டீசல் லிட்டருக்கு ரூ. 2.30 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. இதற்கான அறிக்கைகளை மத்திய அரசின் நிதியமைச்சகம் மாநிலத் துறைகளுக்கு அனுப்பியுள்ளது. பெட்ரோல், டீசலின் அடிப்படை விலையே 2 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் பல்வேறு மாநிலங்களின் உள்ளூர் வரிகளை பொறுத்து அதற்கு மேலாக வாடிக்கையாளர்கள் விலை செலுத்த நேரிடும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com