பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.29 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாதத்தில் முதல் நாளான இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.29 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70 ரூபாயை எட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் சென்னையில் பெட்ரோல் விலை ரூ70-க்கு கீழே இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 காசுகளும் உயர்த்தப்பட்டு இருந்தது.