\
விஷம் போல ஏறும் பெட்ரோல், டீசல் விலை: மக்களின் துன்பம் கண்களுக்கு தெரியவில்லையா?: தினகரன்

விஷம் போல ஏறும் பெட்ரோல், டீசல் விலை: மக்களின் துன்பம் கண்களுக்கு தெரியவில்லையா?: தினகரன்

விஷம் போல ஏறும் பெட்ரோல், டீசல் விலை: மக்களின் துன்பம் கண்களுக்கு தெரியவில்லையா?: தினகரன்
Published on

விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்தாதது மத்திய அரசின் மனசாட்சியற்ற செயல் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ட்வீட் செய்திருக்கும் டிடிவி.தினகரன், “விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல். பெட்ரோல் - டீசலுக்கு வாட் வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே,கொரோனா பேரிடரினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா?” என தெரிவித்திருக்கிறார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com