\
தமிழக நதிகளை இணைக்கக் கோரிய மனு தள்ளுபடி

தமிழக நதிகளை இணைக்கக் கோரிய மனு தள்ளுபடி

தமிழக நதிகளை இணைக்கக் கோரிய மனு தள்ளுபடி
Published on: 

தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் சமீப காலமாக ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடும் என வலியுறுத்தியிருந்தார். எனவே நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரார் உரிய முகாந்திரம் இல்லாமல் வழக்கை தொடர்ந்திருப்பதாக கூறி உச்சநீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com