இந்தியா
நீட்: தமிழக பாடப்பிரிவு மாணவர்களுக்கு விலக்களிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு
நீட்: தமிழக பாடப்பிரிவு மாணவர்களுக்கு விலக்களிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு
நீட் மூலம் நடைபெறும் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் தமிழக பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டில் விலக்களிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முருகவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் தேர்வு தொடர்பாக தமிழத்தில் நிலவிய குழப்பம் காரணமாக தன்னுடைய குழந்தை உள்பட ஏராளமானோர் முறையாக தயாராகவில்லை என்று கூறியுள்ளார். ஆகையால், நடப்பாண்டில் மட்டும் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணைக் கணக்கிட்டு மருத்துவ படிப்பு சேர்க்கை நடத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.