\
சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு

சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு

சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு
Published on: 

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்தது. இதில் முறைகேடு நடைபெற்றதாக சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளன. இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி நேற்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி
சிபிஐ, அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com