இந்தியா
பாக். வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் தேசதுரோக வழக்கில் கைது
பாக். வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் தேசதுரோக வழக்கில் கைது
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக 15 பேர் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல்முறையாக கோப்பையை வென்றது. பாகிஸ்தான் அணியின் வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகவும், அந்நாட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாகவும் மத்தியப்பிரதேச மாநிலம் ஷாபூர் பகுதியைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சுபாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 பேரை ஷாபூர் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தேசதுரோக வழக்கு உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.