\
ஆற்றில் நீச்சல் அடிக்கச் சென்றவரை கடித்து குதறி மூன்று மணி நேரம் காத்திருந்த முதலை

ஆற்றில் நீச்சல் அடிக்கச் சென்றவரை கடித்து குதறி மூன்று மணி நேரம் காத்திருந்த முதலை

ஆற்றில் நீச்சல் அடிக்கச் சென்றவரை கடித்து குதறி மூன்று மணி நேரம் காத்திருந்த முதலை
Published on

ஆற்றில் நீச்சல் அடிக்கச் சென்ற நபர் முதலைக் கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத்தின் ஃபுல்வாடி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதாகும் காந்தி வாசவா என்பவர்,  அருகிலுள்ள ஆர்சாங் ஆற்றில் மாலை 4 மணிக்கு நீச்சல் அடிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்றிலிருந்த முதலை காந்தி வாசவாவைத் கடிக்கத் துவங்கியுள்ளது.

முதலையின் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்துப்போனவர், உதவிக்கேட்டு அலறித்துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட கிராமத்தினர் ஓடி வந்து வாசவாவை மீட்கப் போராடியுள்ளனர். ஆனால், முதலை அவரை மறுக்கரைக்கு இழுத்துச் சென்று போக்குக் காட்டியது. பின்பு அவரது இடது கை உட்பட உடல் முழுதும் கடிக்கவே வலியில் துடிதுடித்தே பரிதாபமாக இறந்து போனார் வாசவா. அவர் இறந்தபிறகும் முதலை மூன்று மணிநேரம் அவரது அருகிலேயே இருந்துள்ளது. இதனால், கிராம மக்கள் கையறு நிலையில் முதலை போனபிறகே அவரது உடலை மீட்டுள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com