”ஒரு முதலமைச்சரை பயங்கரவாதிபோல் நடத்துவதா? மனைவி சந்திக்க கூட அனுமதி மறுப்பது ஏன்?”- ஆம் ஆத்மி சாடல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால்
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் முகநூல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவரை இன்று சந்திக்க அனுமதி கோரி கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் விண்ணப்பம் வழங்கியிருந்தார்.

ஆனால் கெஜ்ரிவாலை சந்திப்பதற்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, ”பிரதமர் மோடியின் உத்தரவின்பேரிலேயே சந்திப்பு அனுமதியை சிறை நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால்
HeadLines|மேற்கூரையில் சிக்கித்தவித்த கைக்குழந்தை மீட்பு To வெள்ளியங்கிரி மலையில் மீண்டும்ஒருவர் பலி

மோடி அரசு மனிதாபிமானமற்ற அனைத்து எல்லைகளையும் தாண்டி வருவகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரை பயங்கரவாதி போல் நடத்துகிறார். சிறையில் கணவரை சந்திக்க சுனிதா கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பதை நாட்டு மக்களுக்கு மோடி அரசு சொல்ல வேண்டும் .” என்று ஆம் ஆத்மியின் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி அமைச்சர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று மதியம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com