40 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஓநாயின் தலை : ஆராய்ச்சியாளர்கள் வியப்பு
ரஷ்யாவில் 40 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஓநாய் ஒன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சிபேரியா பகுதியில் பணி ஓநாய் ஒன்றின் தலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தலையை வைத்து நடத்திய ஆராய்ச்சியில் அது சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓநாய் என்பது தெரியவந்துள்ளது. இதனை ரஷ்யாவின் ‘ஆர்க்டிக் ரீஜியன் ஆஃப் யகுடியா’ என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
அத்துடன் இந்த ஓநாய் வாழ்ந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, மிக நீண்ட தந்தங்களை கொண்ட ராட்சத யானைகள் வாழ்ந்த காலகட்டத்தில் இந்த ஓநாயும் வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பேரழிவால் ராட்சத யானைகளுடன் சேர்ந்து, இந்த ஓநாய் இனமும் அழிந்திருக்கலாம் என கணித்துள்ளனர். மேலும், இந்த ஓநாய் மண்டை கிடைத்திருப்பதை அரிய கண்டுபிடிப்பாக ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் காண்கின்றனர்.