\
 “தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க” - எம்.பியாக பதவியேற்றார் பாரிவேந்தர்

“தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க” - எம்.பியாக பதவியேற்றார் பாரிவேந்தர்

“தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க” - எம்.பியாக பதவியேற்றார் பாரிவேந்தர்
Published on

பெரம்பலூர் தொகுதி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரிவேந்தர் தமிழில் பதவி பிரமானம் செய்து பதவியேற்றுக்கொண்டார். 

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர்.

இந்நிலையில் இன்று மக்களவையில் தமிழ்நாட்டு எம்பிக்கள் பதவியேற்றனர். இதில் தமிழ்நாடு எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர். அப்போது தமிழ்நாடு எம்பிக்கள் தங்களின் பதவியேற்பு உரையின் இறுதியில் ‘வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு என்று முழக்கமிட்டனர். 

அதில் பெரம்பலூர் தொகுதி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரிவேந்தர் தமிழில் பதவி பிரமானம் செய்து பதவியேற்றுக்கொண்டார். இறுதியில் தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க எனக்கூறி பதவியேற்றுக்கொண்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com