இந்தியா
மபி மகாலட்சுமி கோவிலில் பணம் குவித்து வழிபட்ட பொதுமக்கள்
மபி மகாலட்சுமி கோவிலில் பணம் குவித்து வழிபட்ட பொதுமக்கள்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் ராட்லாம் பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பண்டிகை நாட்களில் மக்கள் பணத்தை வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இந்த கோவிலில் பணத்தை வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் என நம்பப்படுவதால் தீபாவளியையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு லட்சக்கணக்கான அளவில் பணம் வைத்து வழிபட்டனர்.