"பண்டிகை காலத்தில் மக்கள் உஷாராக இருக்கவேண்டும்" - பிரதமர் மோடி

"பண்டிகை காலத்தில் மக்கள் உஷாராக இருக்கவேண்டும்" - பிரதமர் மோடி

"பண்டிகை காலத்தில் மக்கள் உஷாராக இருக்கவேண்டும்" - பிரதமர் மோடி
Published on

பண்டிகைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மனதின் குரல் என்ற பெயரிலான மாதாந்திர வானொலி உரையில் பிரதமர் இவ்வாறு பேசினார். தொற்று அபாயம் நீடிக்கும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடப்படாமல் எவரும் விடுபட்டுவிடக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து புதிய சாதனைகளை இந்தியா படைத்து வருவதாகவும் பிரதமர் தன் உரையில் தெரிவித்தார்.

மக்கள் தடுப்பூசி போடுவதுடன் நின்று விடாமல் கொரோனா தற்காப்பு விதிகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் காதி துணிகள் விற்பனையில் சாதனை படைக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com