\
“மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை”: பிரதமர் மோடி

“மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை”: பிரதமர் மோடி

“மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை”: பிரதமர் மோடி
Published on

வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பேசிய பிரதமர், வர்த்தகம் மீண்டும் வேகம் அடைய நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்றார். கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா முன்கூட்டியே தயாராக இருந்தததாகவும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனக் குறிப்பிட்டார்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் விவசாயம், சிறு குறு தொழில்கள், மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com